#JustNow: கைதான தனியார் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேர் சிறையில் அடைப்பு!
மாணவி மரண விவகாரத்தில் கைதான கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் உள்பட 5 பேர் சிறையில் அடைப்பு.
கள்ளகுறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்ற வந்த மாணவி ஸ்ரீமதி மர்ம முறையில் உயிரிழந்தது தொடர்பாக பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியர் ஹரிப்ரியா மற்றும் கணித ஆசிரியர் கிருத்திகா ஆகியோர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், மாணவி உயிரிழந்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட அப்பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட 5 பேரையும் 15 நாட்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்க கள்ளக்குறிச்சி இரண்டாம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) முகமது அலி உத்தரவிட்டார்.
கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றம் ஆக.1 வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க உத்தரவிட்டதால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, மாணவி மரண விவகாரத்தில் கைதான தனியார் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் உள்ளிட்ட 5 பேரும் சிறையிலடைக்கப்பட்டன. மேலும், கலவரத்தில் ஈடுபட்ட 113 பேரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.