#JustNow: ஆயுதப்படை காவலர் தற்கொலை.. ஓராண்டு சாதனையில் இதுவும் ஒன்றா? – ஈபிஎஸ்
ஆன்லைன் சூதாட்டத்தால் அம்பத்தூர் ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்து கொண்டது நெஞ்சை உலுக்குகிறது என ஈபிஎஸ் ட்வீட்.
அம்பத்தூர் அருகே கள்ளிக்குப்பம் பகுதியில் ஆயுதப்படை காவலர் சரவணகுமார் (வயது 30) என்பவர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. உயிரிழந்த காவலரின் உடலை கைப்பற்றி காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறது. ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டத்தில் அதிக பணத்தை இழந்ததால் ஆயுதப்படை காவலர் சரவண குமார் தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியிருந்தது. பாதுகாப்பு பணியில் இருந்தேபோதே காவலர் சரவணகுமார் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் கூறப்பட்டது.
இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தால் அம்பத்தூர் ஆயுதப்படை காவலர் தற்கொலை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிபழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இன்று ஆன்லைன் சூதாட்டத்தால் அம்பத்தூர் ஆயுதப்படை காவலர் சரவணக்குமார் தற்கொலை செய்து கொண்ட செய்தி நெஞ்சை உலுக்குகிறது. உயிரைக் கொல்லும் ஆன்லைன் சூதாட்டம் குறித்த வழக்கில் கோட்டை விட்ட இந்த விடியா அரசு, உரிய தடை சட்டத்தை கொண்டு வராதது ஏன்? இன்னும் எத்தனை உயிர் போகும்வரை காத்திருக்க போகிறீர்கள்? ஓராண்டு சாதனையில் இதுவும் ஒன்றா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று (7.5.2022) ஆன்லைன் சூதாட்டத்தால் அம்பத்தூர் ஆயுதப்படை காவலர் திரு.சரவணக்குமார் தற்கொலை செய்து கொண்ட செய்தி நெஞ்சை உலுக்குகிறது. உயிரைக் கொல்லும் ஆன்லைன் சூதாட்டம் குறித்த வழக்கில் கோட்டை விட்ட இந்த விடியா அரசு, உரிய தடை சட்டத்தை கொண்டு வராதது ஏன்?
1/2
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) May 7, 2022