#JustNow : விஜய் மக்கள் இயக்கத்தின் ஆலோசனை கூட்டம்..! நடிகர் விஜய் பங்கேற்பு..!
சென்னை பனையூர் இல்லத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் நிலையில், நடிகர் விஜய் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
சென்னை பனையூர் இல்லத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நடிகர் விஜய் கலந்து கொண்டுள்ளார். இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள், அணி தலைவர்கள், கிளை மன்ற நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக உருமாற வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னதாக விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள், பல்வேறு சமூக நல பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.