#JustNow: தமிழ்நாட்டில் 75 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை..
அறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாளையொட்டி 75 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை.
முன்னாள் முதலமைச்சர் மறைந்த அண்ணாவின் 113-வது பிறந்தநாள் மற்றும் 75-வது சுதந்திர தினத்தையொட்டி தமிழக சிறையில் இருந்து 75 ஆயுள் தண்டனை கைதிகள் முதற்கட்டமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, புழல் மத்திய சிறை 13, வேலூர் மத்திய சிறை 2, கடலூர் மத்திய சிறை 5, சேலம் மத்திய சிறை 1, கோவை மத்திய சிறை 12, திருச்சி மத்திய சிறை 12, மதுரை மத்திய சிறை 22, திருச்சி பெண் சிறை 2, புழல் பெண் 2 புதுக்கோட்டை சிறை 4 பேர் என மொத்தம் 75 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். நன்னடத்தை விதிகளின்படி 75 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலையாகியுள்ளனர்.
இதற்கு முன்பு கடந்த மாதம் முன்னாள் முதல்வர் அண்ணாவின் 113-வது பிறந்தநாள், 75வது ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி புழல் சிறையில் நீண்டகாலமாக இருந்த 40 கைதிகளை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். நீண்டகாலம் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை விதிமுறைக்குட்பட்டு விடுதலை செய்யலாம் என மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, தமிழக அரசு ஒப்புதல் வழங்கியதையடுத்து விடுதலை செய்யப்பட்டனர்.