#Justnow:மேலும் 256 நடமாடும் மருத்துவமனை சேவை – இன்று தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்!
மக்களை தேடி மருத்தவம் திட்டத்தின் கீழ் கிராமங்களுக்கு மருத்துவ சேவை வழங்க ரூ.70 கோடி மதிப்புள்ள 389 வாகனங்கள் மூலம் நடமாடும் மருத்துவமனை சேவையை கடந்த ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில்,சென்னையில் இரண்டாம் கட்டமாக 256 நடமாடும் மருத்துவமனை சேவையை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைக்கவுள்ளார்.அதன்படி,ஒய்எம்சிஏ மைதானத்தில் நடமாடும் மருத்துவமனை சேவையை முதல்வர் தொடங்கி வைக்கவுள்ளார்.
அதன்படி,நடமாடும் மருத்துவமனையில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பணியில் இருப்பர்.மலை கிராமங்கள் உள்பட அனைத்து பகுதிகளுக்கும் சுழற்சி முறையில் நடமாடும் மருத்துவமனை செல்லும்.தமிழகத்தில் உள்ள தொலைதூர கிராமப்புறங்களில் மருத்துவ சேவை அளிக்க மருத்துவ வாகனங்கள் கொண்டு செல்லப்படும்.
தமிழகம் முழுவதும் 80,000 கிராமங்களில் மருத்துவ வாகனம் மூலம் மாதந்தோறும் 40 மருத்துவ முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நடமாடும் மருத்துவமனையில் உயர் ரத்த அழுத்தம், நீரிவு நோய் பரிசோதனை மற்றும் இதர அத்தியாவசிய மருத்துவ சேவை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.