#JUSTIN: நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு..! நீச்சல் குளத்திற்கு சீல்..!

ஸ்ரீபெரும்புதூர் அருகே நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த நிலையில் நீச்சல் குளத்திற்கு சீல்வைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே நீலமங்கலத்தில் உள் நீச்சல் குளத்தில் 6 வயதான சஸ்வின் வைபவ் என்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தில், தனியார் நீச்சல் குளம் ஒன்றிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சிறுவன் உயிரிழந்ததையடுத்து சிறுவனின் பெற்றோர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து, நீச்சல் குளத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த அதிகாரிகள், நீச்சல் குளத்தில் பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் குளத்திற்கு சீல் வைத்துள்ளனர். அச்சிறுவன் நீச்சல் பழகும் பொழுது உயிரிழந்த காரணத்தினால் நீச்சல் குளத்தின் உரிமையாளரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.