தூத்துக்குடியில் தந்தை-மகன் உயிரிழப்புக்கு பலரும் சமூகவலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், ட்விட்டரில் #JusticeForJeyarajAndFenix எனும் ஹேஸ்டேக், இந்தியளவில் 6-ம் இடத்திலும், இந்தியளவில் முதல் இடத்திலும் இடம்பெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம், தமிழகம் மட்டுமின்றி, இந்தியளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், 2 எஸ்ஐகளை சஸ்பெண்ட் செய்துள்ளார். இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் முழு கடையடைப்பு என தமிழ்நாடு வணிகர் சங்கம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, தந்தை-மகன் உயிரிழப்பிற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், உயிரிழந்த தந்தை-மகனுக்கு மக்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் தங்களின் இரங்கலை #JusticeForJeyarajAndFenix என்ற ஹேஸ்டேக் மூலம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த ஹேஸ்டேக், ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இந்திய அளவில் முதலிடம் மற்றும் உலகளவில் 6 ஆம் இடத்தை பிடித்துள்ளது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…