Justice GR Swaminathan - Savukku Shankar [File Image]
சென்னை: சவுக்கு சங்கர் வழக்கில் தன்னிடம் அதிகாரம் உள்ளவர்கள் பேசியதாகவும் அதனால் இறுதி விசாரணையை இன்றே மேற்கொண்டேன் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.
பெண்காவலர்கள் பற்றி அவதூறாக பேசியதாக கூறி கோவை போலீசார் பிரபல யூ-டியூர் சவுக்கு சங்கரை தேனியில் கைது செய்தனர். அதே போல திருச்சி, சேலம், சென்னையிலும் சவுக்கு சங்கர் மீது வழக்குகள் பதியப்பட்டது. மேலும் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வைத்து இருந்ததாகவும் வழக்குகள் பதியப்பட்டன. இதனை அடுத்து பல்வேறு வழக்குகள் சவுக்கு சங்கர் மீது ஏற்கனவே நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டி சென்னை காவல் ஆணையர் சவுக்கு சங்கர் மீது மே 12இல் குண்டாஸ் உத்தரவு பிறப்பித்தார்.
தற்போது கோவையில் நீதிமன்ற காவலில் இருக்கும் சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் சட்டத்திற்கு எதிராகவும், ஆட்கொணர்வு மனுவையும் சவுக்கு சங்கர் தயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கில் சவுக்கு சங்கர் தரப்பு பிராமண பத்திரங்களை தாக்கல் செய்ய முன்பே உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதனை அடுத்து பிராமண பத்திரம் தாக்கல் செய்ததை அடுத்து, இன்று ஜி.ஆர்.சுவாமிநாதன் – பி.பி பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
சவுக்கு சங்கர் தரப்பில் தாக்கல் செய்த பிராமண பத்திரத்தில் இனி சட்டத்திற்கு அப்பாற்பட்டு உயர் பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பொதுவெளியில் கூற மாட்டேன் என உறுதியளிக்கப்பட்டது. இனி எதிர்காலத்தில் இதுபோல நடந்துகொள்ள கூடாது என நீதிமன்ற அமர்வு அறிவுரை கூறியது.
மேலும், நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டபோது சவுக்கு சங்கர் மீது வன்முறை நிகழ்த்தப்பட்டு இருந்தால் அதனை தேசிய மனித உரிமை ஆணையம் 4 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் பிறகு குண்டாஸ் சட்டத்திற்கு எதிரான வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறுகையில், சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்வதாக கூறினார். ஆனால், நீதிபதி பி.பி.பாலாஜி, குண்டாஸ் விதிக்கப்பட்டது தொடர்பாக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என கால அவகாசம் அளித்தார். இவ்வாறு இரு நீதிபதிகளும் இருவேறு தீர்பபை அளித்தனர். அடுத்து இரு நீதிபதிகளும் ஒருமித்தமாக, சவுக்கு சங்கரை கோவை சிறையில் இருந்து மாற்றி புழல் சிறைக்கு மற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு விசாரணையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறுகையில், சமுதாயத்தில் அதிகாரத்தில் உள்ளவர்கள் என்னிடம் பேசியதால், இந்த வழக்கை இறுதி விசாரணைக்கு அவசரமாக எடுத்தேன் என பரபரப்பு கருத்தை கூறினார். அவர்கள் இந்த வழக்கு இன்னும் கால அவகாசம் அளித்து நீட்டிக்கப்பட வேண்டும் என விரும்பினார்கள். அதனால் தான் இந்த வழக்கை இன்றே இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டேன் என சவுக்கு சங்கர் வழக்கு விசாரணையில் தான் அளித்த உத்தரவுக்கு விளக்கம் அளித்து இருந்தார் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…