நீதிபதி துரைசாமி உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்பு…!
நீதிபதி துரைசாமி உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்க உள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி அவர்கள் பொறுப்பேற்றார். முதலில் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்ற அவர், பின் தலைமை நீதிபதியாக பதவியேற்றுக்கொண்டார்.
நேற்றுடன் அவருக்கு 62 வயது நிறைவடைவடைந்தததையடுத்து நேற்று மாலையுடன் ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து நேற்று மாலை உயர் நீதிமன்ற வளாகத்தில் அவருக்கு பிரிவு உபசார பாராட்டு விழா நடைபெற்றது.
இதனை தொடர்ந்து முனீஸ்வர்நாத் பண்டாரி அவர்கள் ஒய்வு பெற்றதையடுத்து, மூத்த நீதிபதி எம்.துரைசாமி அவர்களை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி இன்று அவர் பொறுப்பு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார்.