காவல்துறையினர் எங்களது ஆதரவாளர்களைத் தாக்கினரே தவிர, ஓ.பி.எஸ் அழைத்து வந்த ரவுடியினரை தடுக்கவில்லை ஓ.பி.எஸ். ஒரு சுயநலவாதி என்பதை மீண்டும் காட்டியுள்ளார் என எடப்பாடி பழனிசாமி பேட்டி.
அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து தற்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து உள்ளார். அப்போது பேசிய அவர், அதிமுக தலைமை அலுவலகத்தில் சமூக விரோதிகள் அத்துமீறி நுழைந்தது குறித்து காவல்துறையில் புகார் அளித்தோம்; எனினும், பாதுகாப்பு வழங்கப்படவில்லை. நீங்கள் இன்று கொடூரமாக அடித்து, தாக்கிய கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் தான் உங்களை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஆக்கியது பொதுக்குழுவில் அவருக்கு மேடையில் நாற்காலி போடப்பட்டது; ஆனால், அவர் வரவில்லை.
காவல்துறையினர் எங்களது ஆதரவாளர்களைத் தாக்கினரே தவிர, ஓ.பி.எஸ் அழைத்து வந்த ரவுடியினரை தடுக்கவில்லை ஓ.பி.எஸ். ஒரு சுயநலவாதி என்பதை மீண்டும் காட்டியுள்ளார். தனக்கு கிடைக்காத பதவி, எவருக்கும் கிடைக்கக் கூடாது என்று சுயநலமாக செயல்படக்கூடியவர்தான் ஓ.பி.எஸ். அதிமுக தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து, அங்குள்ள பொருட்களை அள்ளிக்கொண்டு செல்கிறார் என்றால் இவரெல்லாம் ஒரு தலைவரா, கேவலமாக இருக்கிறது. அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வேண்டுமென்றே திட்டமிட்டு சீல் வைத்துள்ளனர். நீதிமன்றம் மூலமாக விரைவில் நியாயம் பெற்று அதிமுக அலுவலகத்தை தெரிவித்துள்ளார்.
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…