ஒரு வெற்றியை மட்டும் எனக்கு கொடுங்கள்…! – பிரேமலதா
எனக்கு ஒரு வெற்றியை மட்டும் கொடுத்து பாருங்கள். உங்கள் வீட்டு பெண்ணாக இந்த தொகுதியை முன்னேற்றி காட்டுவேன்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பிரேமலதா விஜயகாந்த் சட்டமன்ற தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதனையடுத்து, அவர் விருத்தாச்சலம் தொகுதியில் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், சட்டமன்றத்தில் நகைக்கண்டன் தள்ளுபடி குறித்து பேசி நிச்சயமாக நடவடிக்கை எடுப்பேன். எனக்கு ஒரு வெற்றியை மட்டும் கொடுத்து பாருங்கள். உங்கள் வீட்டு பெண்ணாக இந்த தொகுதியை முன்னேற்றி காட்டுவேன் என்று தெரிவித்துள்ளார்.