சற்று முன்…ரூ.662 கோடியில் திட்டப்பணிகள்,900 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு – தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!

Published by
Edison

சென்னை:ரூ.662 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை மக்களுக்கு அர்பணித்தல்,900 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு அடிக்கல் நாட்டல் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் காணொலி வாயிலாக தொடங்கி வைத்துள்ளார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்தவாறு பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் காணொலி வாயிலாக தற்போது தொடங்கி வைத்துள்ளார்.அதன்படி,நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மொத்தம் ரூ.662.22 கோடி மதிப்பீட்டிலான 17 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 5 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

இதனைத் தொடர்ந்து,தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சிவகங்கை மாவட்டம்,கழனிவாசல் திட்டப்பகுதியில் ரூ.130.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 900 அடுக்குமாடிக் குடியிருப்பு பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

மேலும்,ரூ.2 கோடியே 93 இலட்சம் மதிப்பீட்டில் கள்ளக்குறிச்சி,தென்காசி, செங்கல்பட்டு,திருப்பத்தூர்,ராணிப்பேட்டை மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 6 ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகங்களையும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்துள்ளார்.

Recent Posts

மூக்குத்தி அம்மன் 2-வில் ரெஜினினா எதுக்கு? மாஸ்டர் பிளான் செய்யும் இயக்குநர் சுந்தர் சி!

மூக்குத்தி அம்மன் 2-வில் ரெஜினினா எதுக்கு? மாஸ்டர் பிளான் செய்யும் இயக்குநர் சுந்தர் சி!

சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…

1 hour ago

ரோஹித் சர்மா பேட்டிங் சரியில்லை…”உடனே இதை பண்ணுங்க”..சுனில் கவாஸ்கர் அட்வைஸ்!

துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…

3 hours ago

வீங்கிய வயிற்றுடன் உயிருக்கு போராடும் நடிகர் அபினய்! கல்லீரல் நோயால் அவதி…

சென்னை : தனுஷின் 'துள்ளுவதோ இளமை', தாஸ், என்றென்றும் புன்னகை போன்ற பல படங்களிலும், பல முன்னணி விளம்பரங்களிலும் நடித்துள்ள…

3 hours ago

காலையில் சரிவு.. மதியம் ஏற்றம் .. 2வது முறையாக தங்கம் விலையில் மாற்றம்!

சென்னை : காலையில் குறைந்த தங்கத்தின் விலை மதியம் உயர்ந்துள்ளது. காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்த நிலையில் 3…

3 hours ago

பா.ஜ.க. தொடர்ந்து சட்ட ஒழுங்கு பிரச்சனையில் ஈடுபடுகின்றனர்! செல்வப் பெருந்தகை கண்டனம்!

சென்னை : மும்மொழி கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில்,   மூன்றாவது மொழி ஏதேனும் என குறிப்பிட்டு மத்திய…

4 hours ago

வெயிலுக்கு ஜில்..ஜில்.! மழை அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!

சென்னை : தமிழகத்தில் கோடை காலம் நெருங்கி உள்ள நிலையில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக…

5 hours ago