புதுச்சேரியில் ஜூன் 6 பள்ளிகள் திறப்பு…தமிழகத்தில் எப்போது.? குழப்பத்தில் மாணவர்கள்.!
Schools Reopen: புதுச்சேரி மாநிலத்தில் ஜுன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வரும் 29-ம் தேதி முதல், ஜுன் 5-ம் தேதி வரை கோடை விடுமுறை விடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோடை விடுமுறைக்கு பிறகு ஜுன் 6-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் பொது தேர்வுகள் மற்றும் இறுதியான தேர்வுகள் முடிவடைந்து அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அறிவிக்கப்படாமல் உள்ளது.
அதற்கு காரணம் ஒரு பக்கம் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது, மறுபக்கம் ஜூன் 4-ம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதால் குழப்பம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இது தொடர்பாக ஆலோசனை ஈடுபட்டு வருகிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் எப்போது பள்ளிகள் திறக்கலாம் என்றும், பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்தும் ஆலோசனை ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. விரைவில், பள்ளியில் திறப்பு எப்போது? என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது.