#BREAKING:ஜூன் 15 ஆம் தேதி தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது – உயர்நீதிமன்றம்.!
தமிழக அரசு திட்டமிட்டுள்ள ஜூன் 15 ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை நீதிமன்றம், தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை அவசரமாக நடத்துவது ஏன்? தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு யார் பாதுகாப்பு..? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஜூலை மாதத்தில் ஏன் நடத்தக்கூடாது என்றும் கேள்வி எழுப்பிய நிலையில், அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.
இதையெடுத்து, தமிழக அரசு திட்டமிட்டுள்ள ஜூன் 15 ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் , 9 லட்சம் மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த அனுமதிக்க முடியாது. ஜூலை இரண்டாவது வாரத்தில் தேர்வை நடத்தலாமா என பிற்பகல் 2.30 மணிக்கு தெரிவிக்க அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.