ஜூலை 28ம் தேதி 11ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவு – அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
துணைத்தேர்வெழுதிய 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை 28ம் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு.
தமிழ்நாட்டில் 11-ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவு ஜூலை 28-ஆம் தேதி பிற்பகல் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், 2023 ஜூன்/ஜூலை மாதத்தில் துணைத்தேர்வெழுதிய 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை 28ம் தேதி பிற்பகல் வெளியிடப்படும்.
அதன்படி, துணைத்தேர்வெழுதிய 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஜூலை 28ம் தேதி பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக தங்களது தேர்வெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து, மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்வு முடிவுகள் மீது மறுகூட்டல்/மறு மதிப்பீட்டிற்கு மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு ஆகஸ்ட் 1, 2 ஆகிய தேதிகளில், நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.