ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இன்று தீர்ப்பு! தூத்துக்குடியில் போலீஸ் குவிப்பு!
ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இன்று தீர்ப்பு.
கடந்த 2018-ம் ஆண்டு தூத்துக்குடியில் உள்ள நச்சு ஆலையான ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில், 13 அப்பாவி மக்கள் சுட்டு கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கோரிய வழக்கில், 39 நாட்கள் வழக்கு விசாரிக்கப்பட்டு வாதங்கள் உடைந்த நிலையில், டி.எஸ்.சிவஞானம், வி.பவானி சுப்பராயன் அமர்வு இன்று தீர்பளிக்கிறது.
இந்நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்க தூத்துக்குடி முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.