முன்னாள் அதிமுக அமைச்சர் வேலுமணி மீதமான வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்குகளில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, அறப்போர் இயக்கம் சார்பாக புகார்கள் அளிக்கப்பட்டன. இந்த புகார்கள் மீது தற்போது இரண்டு வழக்குகள் பதியப்பட்டு உள்ளன. இந்த புகாரின் அடிப்படையில், எஸ். பி வேலுமணிக்கு சொந்தமான வீடு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். சோதனையை தொடர்ந்து மொத்தம் எஸ். பி வேலுமணி உட்பட 17 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். தற்போது இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…