சசிகலா தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!
அதிமுக பொதுச்செயலாளர் பதிவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் பொதுக்குழு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையடுத்து, சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.
இதன்பின், ஜெயலலிதா மறைவிற்கு ஒன்றை தலைமை பிரச்சனையால் ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகளாக பிளவுபட்டது. கடந்த ஆண்டு ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே, தன்னை அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா உரிமையியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை நிராகரித்து நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இதனை எதிர்த்து சசிகலா ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி சுப்பிரமணியன், செந்தில் குமார் அமர்வு முன்பு விசாரணை நடந்து வருகிறது. அப்போது, இரு தரப்பிலும் வாதம் முன்வைக்கப்பட்டது. அதன்படி, சசிகலா தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், அதிமுகவின் மூத்த தலைவர்களாக இருந்த மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி போன்றவர்களால் முன்மொழியப்பட்டும், வழிமொழியப்பட்டும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக பதவி வகித்து வந்த சசிகலாவை நீக்கியது செல்லாது.
ஓஎன்ஜிசி கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் – இபிஎஸ்
பதிவில் இருந்து நீக்குவதற்கு அதிகாரமில்லை. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதன் மூலம் அடிப்படை அமைப்பு மாற்றப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் உருவாக்கிய விதிகளுக்கு புறம்பாக கட்சிகளின் விதிகள் இஷ்டம்போல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த விசாரணையின்போது நீதிபதிகள் முன்வைத்த கேள்விகளுக்கும், அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ஏற்கனேவே பதில் கூறியிருந்தார்.
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து விகே சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது, 2017ல் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் சட்ட விதிகளின்படி கூட்டப்படவில்லை என சசிகலா தரப்பில் கூறப்பட்டது. இதுபோன்று அதிமுக தரப்பு கூறுகையில், கட்சியின் உட்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழு விதிகளின்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிமுக விதிகளின்படி தீர்மானம் நிறைவேற்றியதால் வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என தெரிவிக்கப்பட்டது. எனவே, அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம். இதனிடையே, இந்த வழக்கு விசாரணையில் அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என ஓபிஎஸ் தரப்பினர் பதில் மனு தாக்கல் செய்திருந்தனர்.