அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2021ல் முதலமைச்சராக இருந்தபோது, அவரது ஆய்வு பணிக்காக பாதுகாப்புக்கு சென்ற சிறப்பு டிஜிபி முன்னாள் ராஜேஷ் தாஸ், பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ராஜேஷ் தாஸ், முன்னாள் எஸ்பி கண்ணன் உள்ளிட்டோர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசராணை நடத்தினர்.
மேலும், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையில் விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி ராஜேஷ் தாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் நாளை தீர்ப்பு வழங்குவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்துள்ளார்.
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்த முன்னாள் டி.ஜி.பி. ராஜேஸ்தாசின் மேல்முறையீட்டு வழக்கில் விழுப்புரம் நீதிமன்றம் நாளை மறுதினம் தீர்ப்பு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…