சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக சுமார் 2,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதற்கிடையில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது.
அதேநேரம் செந்தில் பாலாஜி ஜாமீன் குறித்து கீழமை நீதிமன்றத்தை மீண்டும் நாடலாம் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இதைத்தொடர்ந்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் 2 முறை செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து 3-வது முறையாக செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
தமிழக அரசு முதலீடு இலக்குகளை அதிகப்படுத்த வேண்டும்- அண்ணாமலை..!
இந்த மனு மீதான விசாரணை கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்ய கோரி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி அல்லி முன்பு நேற்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை தரப்பில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டது. இதைதொடந்து, இந்த வழக்கின் விசாரணையை இன்று ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், செந்தில் பாலாஜி ஜாமீன் மீது இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் வரும் 12-ஆம் தேதி ஜாமீன் மனு மீது தீர்ப்பு வழங்கப்படுகிறது என சென்னை முதன்மை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் பேத்தியும், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளுமான சங்கமித்ரா அன்புமணி ,…
சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்துள்ள படம் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை…
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…