அதிமுக பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த தனி நீதிபதி தடை விதித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பினர், கட்சியின் பெயர், சின்னம், கொடி மற்றும் லெட்டர் பேட் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.
இது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இதனால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த செப்டம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதிமுக பொதுச்செயலாளராக தன்னை தேர்தல் ஆணையமும், உயர்நீதிமன்றமும் அங்கீகரித்துள்ள நிலையில், ஓபிஎஸ் இவ்வாறு செயல்படுவது குழப்பத்தை ஏற்படுத்தும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கில் ஓபிஎஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய தொடர்ந்து அவகாசம் கேட்டதால் நீதிபதி அதிருப்தி அடைந்தார். இதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, கட்சியின் பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
இதன்பின், தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்ய மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரித்து, தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம்.
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…