ராமேஸ்வரம் கடலில் சாக்கடை நீர் கலப்பது குறித்து நீதிபதிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கேள்வி.!
ராமேஸ்வரம் கடலில் சாக்கடை நீர் கலப்பதை கண்டித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிபதிகள் அதிருப்தி.
ராமேஸ்வரம் கடலில், பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக நிறைவு பெறாததால் சாக்கடை நீர் அக்னிதீர்த்த கடல் பகுதியில் கலக்கிறது. இது குறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிபதிகள், மாவட்ட நிர்வாகம் மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர். புனித கடலில் கழிவுநீரா? மக்கள் புனித நீரில் நீராட வருகிறார்களா? சாக்கடை நீரில் நீராட வருகிறார்களா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் இது குறித்து நடவடிக்கை எடுக்க வில்லை என நீதிபதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.