மேகாலயா நீதிமன்றத்திற்கு தஹில் ரமணி மாற்றப்பட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமணியை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி நீதிபதி பணிநியமன குழுவான கொலிஜியம் பரிந்துரை செய்து இருந்தது.ஆனால் இதனை ஏற்க மறுத்த ரமணி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
எனவே நீதிபதி ரமணி மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதியாக வரவேண்டும் என்று வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினார்கள்.இதன் பின்னர் மேகாலயா நீதிமன்றத்திற்கு தஹில் ரமணி மாற்றப்பட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கறிஞர் கற்பகம் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு விசாரணைக்கு உகந்ததா இல்லையா என்பது குறித்து விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள்,எந்த ஒரு நீதிபதியாக இருந்தாலும் தான் பாதிக்கப்பட்டதாக கருதினால் அவர்கள் மட்டுமே வழக்கு தொடர வேண்டும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது .மூன்றாவது நபர் வழக்கு தொடர வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தனர்.மேலும் இது தொடர்பான வழக்கினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக தெரிவித்துவிட்டனர்.
சென்னை : இன்று ஐபிஎல் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது. முதல் போட்டி மதியம் 3:30மணிக்கு லக்னோ மற்றும் குஜராத்…
சென்னை : ஒரு காலத்தில் ஐபிஎல் தொடரில் ஒரு பலமான அணியாக பார்க்கப்பட்ட சென்னை அணி, இந்த சீசனில் பரிதாபமாக…
சென்னை : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலில் பேட்டிங்…
சென்னை : ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தொடர்ந்து 5வது முறையாக தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ். 8…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…