யூடியூபர் மதனின் பேச்சுகள் கேட்க முடியாத அளவிற்கு மோசமாக இருப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
யூ-டியூபர் மதன் பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் வீடியோ கேம்களை லைவ்வாக விளையாடி யூ-டியூபில் பதிவேற்றம் செய்து வந்தார். யூ-டியூபர் மதன் ஆன்லைன் கேம் விளையாட்டின்போது பெண்களை ஆபாசமாகப் பேசி பல வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
யூ-டியூபர் மதன் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகார் தொடர்பாக மதனை விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், மதன் விசாரணைக்கு ஆஜரகாமல் தலைமறைவாக உள்ளார். இதைத்தொடர்ந்து, யூ டியூபர் பப்ஜி மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று யூ-டியூப்பர் மதனின் மனைவி, தந்தையிடம் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். மதன் யூ-டியூப் சேனலின் நிர்வாகியாக மதன் மனைவி கிருத்திகா இருந்ததால் கிருத்திகா கைது செய்யப்பட்டு வரும் 30-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் உள்ளார். இந்நிலையில், யூடியூபர் மதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி யூடியூபர் மதனின் பேச்சுகள் கேட்க முடியாத அளவிற்கு மோசமாக இருப்பதாக உள்ளது. மதன் வீடியோ பதிவுகளை கேட்டுவிட்டு வந்து வாதிடும்படி ஜாமீன் வழக்கில் ஆஜரான வழக்கறிஞரிடம் நீதிபதி தெரிவித்தார். மேலும் வழக்கை நாளை நீதிபதி ஒத்திவைத்தார்.
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…