விசாரணை கைதி மரணம்., தூத்துக்குடி டிஎஸ்பிக்கு ஆயுள் தண்டனை!
1999-ல் தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலையதில் விசாரணை கைதி மரண வழக்கில் தூத்துக்குடி டிஎஸ்பி மற்றும் 8 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது செய்யப்பட்டு தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் உயிரிழந்தார். இந்த உயிரிழப்பு தொடர்பாக தூத்துக்குடி விஏஓ தலைமையில் விசாரணை நடைபெற்றது.
அதில், காவல்துறை விசாரணையில் வின்சென்ட் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு உயிரிழந்தார் என விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. இதனை அடுத்து. அப்போது பணியில் இருந்து தற்போதைய தூத்துக்குடி டிஎஸ்பி ராமகிருஷ்ணன், தென்காசி இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் 7 காவலர்கள் மீது வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்கு தூத்துக்குடி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை 25 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பை இன்று நீதிபதி தாண்டவன் வாசித்தார். அதில், தாளமுத்து நகர் காவல்நிலையத்தில் வின்சென்ட் 1999-ல் உயிரிழந்த வழக்கில், தூத்துக்குடி டிஎஸ்பி ராமகிருஷ்ணன் மற்றும் 8 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.