தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் – குற்றவாளியா???
ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன், ஓஎன்ஜிசி நிறுவனத்தால் விளைநிலங்கள் பாதிப்புக்குள்ளாவதில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமே குற்றவாளி என தெரிவித்துள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் ஓஎன்ஜிசியின் உண்மையான கள நிலவரம் என்ற தலைப்பில் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில் மீத்தேன் திட்ட எதிர்ப்பியக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன், சூழலியல் ஆர்வலர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது ஓஎன்ஜிசியின் 71 பெட்ரோலியக் கிணறுகளில் ஒன்றுக்குக் கூடச் சுற்றுச்சூழல் உரிமம் இல்லை எனத் தெரிவித்தனர். மேலும் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் விளைநிலங்கள் பாதிப்புக்குள்ளாவதில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமே குற்றவாளி என ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் தெரிவித்துள்ளார்.
மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு