தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில் கைதான ஆய்வாளர் ஸ்ரீதர், காவலர் வெயில்முத்து ஆகியோரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மதுரை முதலாம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிசிஐடி போலீசார் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சிபிஐ முதலில் கைது செய்யப்பட்ட ஸ்ரீதர் உட்பட 5 பேரை காவலில் எடுத்து விசாரித்தனர்.
அதன்பின் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த்தும்போது, ஆய்வாளர் ஸ்ரீதருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் தன்னை மருத்துவமனையில் சிகிக்சை பெற அனுமதிக்கவேண்டும் என நீதிபதியிடம் அவர் தெரிவித்தார். அதன்படி, நீதிபதி சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிக்சை பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தினார். மேலும், அவரை மதுரை மத்திய சிறையில் இருந்து மதுரை ராஜாஜி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்றது.
இந்நிலையில், ஆய்வாளர் ஸ்ரீதர், காவலர் வெயில்முத்து ஆகியோர் மதுரை முதலாம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு கேட்டு வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு இன்று மதுரை முதலாம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், இருவரின் ஜாமின் மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…