10 மாவட்ட பாஜக அலுவலகத்தை திறந்து வைத்தார் ஜே.பி.நட்டா..!
தமிழகத்தில் ஒரே நாளில் 10 பாஜக அலுவலகங்கள் திறக்கப்பட்டது இதுவே முதல்முறை என ஜே.பி.நட்டா பேச்சு.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அவர்கள் தமிழகம் வருகை புரிந்துள்ளார். அவருக்கு பாஜக சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரிக்கு வரும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, 10 மாவட்ட பாஜக அலுவலகங்களை திறந்து வைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளி கூட்டுரோட்டில் பாஜக தலைமை அலுவலகத்தை திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து, 5 அடி உயரக் கம்பத்தில் பாஜக கொடியை ஏற்றி வைத்தார். பின், தருமபுரி, நாமக்கல், திருச்சி, திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்ட பாஜக அலுவலகங்களை காணொளி மூலமாக திறந்து வைத்தார். இந்த நிகழ்வில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஒரே நாளில் 10 பாஜக அலுவலகங்கள் திறப்பு
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தமிழகத்தில் ஒரே நாளில் 10 பாஜக அலுவலகங்கள் திறக்கப்பட்டது இதுவே முதல்முறை. அனைத்து மாவட்ட தலைமையகத்தில், நவீன முறையில் பாஜக அலுவலகம் திறக்க அமித்ஷா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார் என தெரிவித்துள்ளார்.