தமிழகம் வரும் ஜே.பி.நட்டா… மையக்குழுவுடன் நாளை சென்னையில் ஆலோசனை!

Published by
பாலா கலியமூர்த்தி

நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழக பாஜக தலைவா் அண்ணாமலையின் ’என் மண் என் மக்கள்’ யாத்திரையை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28ம் தேதி மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ராமேஸ்வரத்தில தொடங்கி வைத்தாா். இந்த யாத்திரையின் முதற்கட்டம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட யாத்திரையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வருகிறார்.

இந்த சூழலில், ’என் மண் என் மக்கள்’ நாளை சென்னையில் நிறைவு பெறுகிறது. இந்த நிறைவு விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே,  அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரையின் சென்னை பேரணிக்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.

சென்னை சுற்றுலா பேருந்து மீது லாரி மோதி கோர விபத்து.! 8 பேர் உயிரிழப்பு.!

இந்த நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாளை சென்னை வருகிறார். இவரது இந்த பயணம் அரசியல் வட்டாரத்தில் முக்கிய வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது. நாளை சென்னை வரும் ஜே.பி.நட்டா, தமிழக பாஜக நிர்வாகிகள் சந்திப்பு, பொது கூட்டம் என பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு போன்ற பணிகளில் மும்மரமாக ஈடுபட்டு வரும் நிலையில், ஜே.பி.நட்டா நாளை தமிழகம் வருகிறார். பிரதமரின் வருகைக்கு முன்பு கூட்டணியை இறுதி செய்யும் முனைப்பில் தமிழக பாஜக உள்ளது. அந்தவகையில், சென்னையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நாளை மையக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

சென்னை சின்னமலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நாளை பிற்பகல் 12 மணிக்கு நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக ஜே.பி.நட்டா தலைமையில் பாஜக மைய நிர்வாகிகள் குழு ஆலோசனை நடத்த உள்ளனர். மேலும், தேர்தலுக்கான கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட உள்ளது. இதன்பின் நாளை ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

Recent Posts

நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…

7 minutes ago

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

9 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

11 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

12 hours ago

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…

12 hours ago

“அம்பேத்கர்… அம்பேத்கர்…” அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் – கொந்தளித்த விஜய்!

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…

14 hours ago