சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், வேளாண் வணிகத் திருவிழாவை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து விவசாயிகள் பங்கேற்றுள்ளனர். இதன்பின் இவ்விழாவில் உரையாற்றிய முதலமைச்சர், வேளாண் வணிக திருவிழாவின் தொடங்கி வைப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
வேளாண் துறைக்கு முக்கியத்துவம் தரும் வகையில் திமுக அரசு வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்தது. ஒரு நாட்டின் செழிப்பின் அளவுகோலாக இருப்பது வேளாண்துறைதான். திமுக ஆட்சியில் மண்ணும் செழித்துள்ளது, மக்களும் செழித்துள்ளனர். வேளாண் துறை, மக்களின் வாழ்க்கை மற்றும் வளர்ச்சியோடு தொடர்புடையது. அரிசி உற்பத்தி மட்டுமின்றி பயறு, சிறுதானியம் உற்பத்தியிலும் சாதனை படைத்திருக்கிறோம்.
கடந்த 2 ஆண்டுகளாக உழவர்களின் உள்ளத்தில் மகிழ்ச்சியை பார்க்க முடிகிறது. உழவர்கள் உற்பத்தியாளர்களாக மட்டுமே இருந்துவிட கூடாது, அவர்கள் விற்பனையாளர்களாகவும் மாறவே உழவர் சந்தை கொண்டு வந்தோம். விவசாயிகள் விற்பனையாளராக மாற வேண்டும் என்பதற்காக உழவர் சந்தைகளை கலைஞர் ஏற்படுத்தி கொடுத்தார். விவசாயிகளுக்கு கடன் மானியம் வழங்குவதில் அக்கறையோடு செயல்படுகிறோம். தமிழ்நாட்டில் வேளாண் புரட்சி ஏற்பட்டுள்ளது, இதற்கு மகுடம் சூட்டுவது போல் வேளாண் திருவிழா நடைபெறுகிறது.
வேளாண் ஏற்றுமதி அளவை அதிகப்படுத்த திட்டமிடப்பட்டு மின்னணு முறையில் பணிகள் நடைபெற்று வருகிறது. வேளாண்துறையில் உற்பத்தியை அதிகரிக்க உள்ளவர்களுக்கு நவீன தொழில்நுட்பம் தெரிந்திருக்க வேண்டும். உள்ளவர்களுக்கு தொழில்நுட்பமும், அதிகாரிகளுக்கு வேளாண்மையும் தெரிந்திருக்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்பட்டது. வேளாண் உற்பத்தியில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உற்பத்தி அதிகரிக்கப்படும். பாஜக அரசு விவசாயிகளுக்கு விரோதமானது.
விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்து நடுங்கும் குளிரில் விவசாயிகளை போராட வைத்தது மத்திய அரசு. வேளாண் அறிவை உள்ளவர்கள் மட்டுமின்றி அனைவரும் அறிந்திருக்க வேண்டும் என தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், புதிதாக 10 உழவர் சந்தைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது எனவும் வேளாண் வணிக திருவிழாவில் கூறியுள்ளார்.
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை 2-வது பாகம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் டிசம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில்…
சென்னை : வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலைக்குள் புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று இன்று மாலை 4 மணியளவில் ஃபெங்கால்…
பாட்னா : கடந்த 2 நாட்களாக ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற்று வந்தது. 477 வீரர்களை உள்ளடக்கிய…
சென்னை : வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அடுத்த 6 மணி நேரத்தில் (இரவு 7.30 மணிக்குள்) புயலாக…
சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷின் காதல் கதை சினித்துறையில் பல வதந்திகள் உண்டு. ஆனால், கீர்த்தி அதையெல்லாம்பெரியதாக எடுத்துக்…