வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்ல செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு..!
வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்ல செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு பதிவு கடந்த 27-ஆம் தேதி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், இன்று காலை 8 மணி முதல் வாக்கு என்னும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் 15 சுற்றுகளாக எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 3 சுற்று எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்ல செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்ல அனுமதிக்குமாறு காவல்துறையினரிடம் செய்தியாளர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அனுமதி மறுக்கப்பட்டதால் போலீசாருடன் செய்தியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.