தமிழகத்தில் கொரோனவால் உயிரிழந்த பத்திரிகையாளர்.. ஸ்டாலின் இரங்கல்!

Default Image

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் தனியார் தொலைக்காட்சியின் மூத்த ஒளிப்பதிவாளர் உயிரிழந்துள்ள நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3,600க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வந்தனர். இதில் குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் உள்ளது.

இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தால், தமிழகத்தில் பத்திரிகையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனியார் தொலைக்காட்சியின் மூத்த ஒளிப்பதிவாராக பணியாற்றி வந்தவர், வேல்முருகன். 40 வயதாகும் இவர், கடந்த 15 நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்துக்கொண்டே வந்தநிலையில், இன்று அதிகாலை வேல்முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். வேல்முருகன் உயிரிழந்ததற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும்  நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் அவர் தெவித்ததாவது, மூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் கொரோனாவில் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியையும், வேதனையையும் அளிப்பதாகவும், அவருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார். அதுமட்டுமின்றி, முன்கள வீரர்களாகப் பணியாற்றும் ஊடகத் துறையினர் தங்களின் பாதுகாப்பிலும் கவனம் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்