ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியீடு.
வேலூர் தோட்டப்பாளையம் தில் உள்ள பிரபல நகைக் கடையான ஜோஸ் ஆலுக்காஸில், நேற்று பின்பக்க சுவர் வழியாக துளையிட்டு மர்ம நபர்கள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் நகைக்கடையை சுற்றி உள்ள சாலைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வரும் போலீசார், தங்கும் விடுதிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நகை கடையில் இருந்த சிசிடிவியில் ஒரு கொள்ளையனின் உருவம் பதிவாகி உள்ளது.
அந்த கொள்ளையன் சிறுவர்கள் பயன்படுத்தும் பொம்மை முகக்கவசம் ஆன சிங்கம் பொம்மை முககவசத்தை அணிந்தபடி சிசிடிவி கேமராவில் ஸ்பிரே அடிப்பதற்காக கையில் ஸ்ப்ரே பாட்டில் உடன் இருப்பது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் இருப்பவரின் அங்க அடையாளங்களை அடிப்படையாகக் கொண்டு குற்றவாளிகளை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை : நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் ட்ரெய்னிங் (NCERT) அமைப்பு, இந்தியாவில் பள்ளிக் கல்விக்கான பாடநூல்களை…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
சென்னை : மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள மல்லை…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில்,…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…