ஜாக்டோ – ஜியோ நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்-மு.க.ஸ்டாலின்
தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கிறோம் என்று எதிர்மறை நடவடிக்கைகளில் ஈடுபடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், ஜாக்டோ ஜியோ அமைப்பினரை நேரில் அழைத்துப் பேசி, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கும், போராட்டத்திற்கு நிரந்தர தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நள்ளிரவில் கைது செய்யப்பட்ட ஜாக்டோ – ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கிறோம் என்று எதிர்மறை நடவடிக்கைகளில் ஈடுபடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.