தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் கலியாகவுள்ள 685 ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்களுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசுஅறிவித்துள்ளது. அதன்படி, அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் காலியாக பணியிடங்களுக்கு இன்று மதியம் 1.00 மணி முதல் வரும் செப். 18ம் தேதி மதியம் 1.00 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.
இப்பணியிடங்களுக்கு தகுதி உடையவர்கள் http://arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான அனைத்து விவரங்களையும் மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். எழுத்து தேர்வு, திறன் தேர்வு (செய்முறை), நேர்காணல் ஆகிவற்றின் அடிப்படையில் வெளிப்படை தன்மையுடன் மட்டுமே பணி நியமனம் நடைபெறும் என்றும் தகுதியின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புரோக்கர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்தில் சென்னை, மதுரை, கும்பகோணம், கோவை, நெல்லை, விழுப்புரம் உள்பட 8 போக்குவரத்து மண்டலங்கள் உள்ளன. கடைசியாக இங்கு 2013-ம் ஆண்டுக்கு ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. ஆனால், அதன்பிறகு கடந்த 10 ஆண்டுகளாக புதிய பணியாளர்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் நியமிக்கப்படவில்லை. இந்த சமயத்தில் 6 போக்குவரத்துக் கழகங்களில் உள்ள ஓட்டுநர் – நடத்துநர் காலிப்பணியிடங்களை நிரப்ப இந்த ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…