#JobAlert : சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

சென்னை மாநகராட்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள் ஓராண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியில் ஈடுபட வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு பணிகளில் மருத்துவர்கள் , செவிலியர்கள் மற்றும் துப்பரவு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மட்டும் சென்னையில் அதிகபட்சமாக 4,640 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ள மருத்துவ அலுவலர்கள் ஓராண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விருப்பம் உள்ள, தகுதி உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் நேரடியாக, கல்வித்தகுதி உள்ளிட்ட அசல் சான்றிதழ்களுடன் 29.04.2021 மற்றும் 30.04.2021 (காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை) நடைபெற உள்ள நேர்காணலில் நேரடியாக கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
பணியிடங்கள்:
மருத்துவ அலுவலர்கள் (Medical Officer) -150 பேர்
செவிலியர் (Staff Nurse) – 150 பேர்
ஊதியம்:
மருத்துவ அலுவலர்கள் – ரூ.60,000/-
செவிலியர் -ரூ.15,000/-
நிபந்தனைகள்:
1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.
2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.
3. பணியில் சேருவதற்கான சுய விருப்பு ஒப்புதல் கடிதம் (undertaking) அளிக்க வேண்டும்.
நேர்காணலுக்கு வர வேண்டிய முகவரி :
சென்னை மாநகர நல சங்கம், பொதுசுகாதாரத்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் மாளிகை, சென்னை – 600003.