கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு கொரோனா தடுப்பு பணிக்கென 100 தற்காலிக செவிலியர்கள் மூன்று மாத காலத்திற்கு நேர்காணல் மூலம் நியமிக்கப்பட உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நாள்தோறும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது.
இந்நிலையில், கொரோனா தடுப்பு பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள் முன் களப் பணியாளர்கள் அனைவரும் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தற்காலிக வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. கோவையில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா காரணமாக 100 தற்காலிக செவிலியர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து கோயம்புத்தூர் மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு கொரோனா தடுப்பு பணிக்கென 100 தற்காலிக செவிலியர்கள் மூன்று மாத காலத்திற்கு நேர்காணல் மூலம் நியமிக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு மாதம் ரூ.12,000/- தொகுப்பூதியம் வழங்கப்படும். தகுதியுடைய நபர்கள் (செவிலியருக்கான குறைந்தபட்ச கல்வி தகுதி B.Sc Nursing/Diploma Nursing தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்) 03.06.2021 காலை 10.00 மணிக்கு கீழ்காணும் அனைத்து அசல் மற்றும் ஒரு நகல் ஆவணங்களுடன் டவுன்ஹால் அருகில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு கோரப்படுகிறது என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப.,தெரிவித்துள்ளார்கள்.
1.கல்விச் சான்றிதழ்கள்
2.இருப்பிட சான்று
3.சாதிச் சான்று
4.ஆதார் அட்டை
நீலகிரி : கடந்த 3ம் தேதி பெய்த மழையால் மலை ரயில் பாதையின் பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டன,…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி அடுத்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை: வடகிழக்கு பருவமழைக் காலத்தில், அடிக்கடி பரவும் நோய்கள், குறிப்பாக டெங்கு, வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தவிர்க்க முடியாத…
பெங்களூர் : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டியில் எந்தெந்த வீரர்கள் எந்தெந்த அணிக்கு ஏலத்தில் சென்று விளையாடப்போகிறார்கள் என்ற…
சென்னை : இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கங்குவா’ படம் சூர்யாவின் 42வது படமாகும். இப்படம் வரும் நவம்பர்…