தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்று வருகிறது. இன்றும் நாளையும் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறுகிறது. உலக முதலீட்டாளர் மாநாட்டில் தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகிறது. இந்நிலையில், ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி காணொலி பேசினார். அப்போது” ஜியோ நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.35,000 கோடியை முதலீடு செய்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
தவிர்க்க முடியாத காரணங்களால் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் என்னால் பங்கேற்க முடியவில்லை. இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, நாட்டிலேயே தொழில் நிறுவனங்களுக்கு இணக்கமான மாநிலங்களில் முன்னிலையில் உள்ளது. அனைத்து துறைகளும் தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது. இந்தியாவின் முன்னேற்றத்தில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாடு அரசுடன் இணைந்து செயல்படுவோம்.
நல்லாட்சி நடப்பதால் முதலீடுகள் குவிகின்றன- முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
3.5 கோடிபயனீட்டாளர்களுக்கு மின்னணு புரட்சியை கொண்டு சேர்த்துள்ளோம். உலகில் அதிவிரைவாக 5ஜி தொழில்நுட்பத்தை மக்களுக்கு கொண்டு சேர்த்தது ஜியோ நிறுவனம். தமிழ்நாட்டில் அடுத்த வாரம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழிற்சாலையை தொடங்கப்பட உள்ளது. தொழில் தொடங்குவதற்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. வரும் காலத்திலும் ரிலையன்ஸ் நிறுவனம் திட்டங்களை தமிழக அரசு ஊக்குவிக்கும் என்றும் நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…