சென்னையில் 5ஜி சேவை தொடக்கம்.! ஜியோ நிறுவன தலைவர் காணொளி வாயிலாக துவங்கினார்.!
ஜியோ நிறுவன தலைவர் ஆகாஷ் அம்பானி, காணொளி வாயிலாக சென்னையில் 5ஜி சேவையை துவங்கி வைத்துள்ளார்.
கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் இந்தியாவில் பிரதான முக்கிய நகரங்களில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரையில் ஏர்டல் நிறுவனம் மட்டுமே 5ஜி சேவையை சென்னையில் வழங்கி வருகிறது.
தற்போது அதேபோல ,சென்னையில் தனது 5ஜி சேவையை இன்று ஆரம்பித்துள்ளது ஜியோ நிறுவனம். இன்று ராஜஸ்தானில் 5ஜி சேவையை ஜியோ நிறுவன தலைவர் ஆகாஷ் அம்பானி தொடங்கி வைத்தார்.
ராஜஸ்தான் மாநிலம் நாத்துராவாராவில் 5ஜி சேவையினை தொடங்கிய ஆகாஷ் அம்பானி அங்கிருந்து கொண்டே காணொளி வாயிலாக சென்னையில் 5ஜி சேவையை தொடங்கினார்.
பின்னர் ஜியோ நிறுவன தலைவர் ஆகாஷ் அம்பானி கூறுகையில், ‘ நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்த 5ஜி சேவை கிடைக்கவேண்டும். ஜியோவின் வெல்கம் ஆஃபர் மூலம் ஜியோ 5ஜி சேவையை ஜியோ 5ஜி பயனர்கள் அனுபவிக்கலாம். என குறிப்பிட்டுள்ளார் .
குறிப்பிட்ட கஸ்டமர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மட்டும் போன் மூலம் தொடர்பு கொண்டு 5ஜி சேவை வழங்கப்படும். இதற்காக 5ஜி சிம் வாங்க தேவையில்லை. 5ஜி போன் இருந்தாலே போதும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்மார்ட் போனில் உள்ள 5ஜி ஆப்ஷனை கிளிக் செய்தால் போதும்.
5ஜி சேவையை 1 Gbps வேகத்தில் தேர்ந்தெடுக்கப்படும் கஸ்டமர்கள் இலவசமாகப் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.