ஜிப்மர் மருத்துவமனையில் 1000 படுக்கைகள் கொண்ட வசதி வேண்டும் – எம்.பி ரவிக்குமார்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஹர்ஷ்வர்தனுக்கு விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.
ஜிப்மர் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான அரசு மருத்துவமனைகளில் ஒன்றாகும்.
மருத்துவமனை இணை இயக்குனர் ஜிப்மர் வழங்கிய தகவல்களின்படி, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 250 படுக்கைகள் கொண்ட ஒரு வார்டு சிறப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் உட்பட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்து வரும் நோயாளிகளுக்கு ஜிப்மர் மருத்துவமனை சிகிச்சை அளித்து வருகிறார்.
தற்போது புதுச்சேரியிலிருந்துகொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே ஜிப்மர் மருத்துவமனையில் மக்களின் தேவையை பூர்த்தி செய்ய போராடி வருகிறது.
இந்நிலையில் கொரோனா வார்டின் திறனை 1000 படுக்கைகளாக உயர்த்த உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். ஜிப்மர் கொரோனா சோதனை மையமாக செயல்படுவதால், ஒரு நாளைக்கு குறைந்தது 1000 மாதிரிகளை சோதிக்க வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு ரவிக்குமார் எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் முதல்.., அமெரிக்கா – உக்ரைன் அரசியல் நிலவரம் வரை…
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025
SA vs NZ : தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வில்லியம்சன் – ரச்சின்! நியூசிலாந்து வைத்த இமாலய இலக்கு.!
March 5, 2025