#ஜெ.மரணம்:விசாரணையை முடித்த ஆறுமுகசாமி ஆணையம் – தமிழக அரசு போட்ட உத்தரவு!

Published by
Edison

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணம் தொடர்பாக பல்வேறுசர்ச்சைகள் எழுந்த நிலையில்,அவரது மரணம் குறித்து விசாரிக்க கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசு,ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.அதன்படி, ஜெயலலிதா மரணம் தொடர்பாக இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். இதனையடுத்து,3 ஆண்டுகளுக்கு பின் ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக,அண்மையில் மீண்டும் விசாரணையை தொடங்கிய நிலையில்,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆகியோரிடமும் விசாரணை நடத்தியது.

சசிகலா மட்டுமே உடனிருந்தார்:

அதன்படி நடைபெற்ற விசாரணையின்போது இளவரசி கூறுகையில்: ”அப்பல்லோ மருத்துவமனையில்,ஜெயலலிதா அவர்கள் இருந்தபோது சசிகலா மட்டுமே உடனிருந்து பார்த்துக் கொண்டார் எனவும்,75 நாட்களும் மருத்துவமனைக்கு தான் சென்று வந்ததாகவும்,ஆனால் ஓரிரு முறை மட்டுமே கண்ணாடி வழியாக ஜெயலலிதாவை பார்த்ததாகவும் ஆறுமுகசாமி ஆணையத்தில் கூறியதாக தகவல் வெளியாகியது.

ஜெயலலிதா,அப்பல்லோ மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டார்?:

அவரைத் தொடர்ந்து,ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருந்ததை தவிர வேறு உபாதைகள் அவருக்கு இருந்தது தனக்கு தெரியாது என்றும் 2016 ஆம் ஆண்டு செப்.22 ஆம் தேதி ஜெயலலிதா அவர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டார்? என்ன சிகிச்சை வழங்கப்பட்டது என்று தனக்கு தெரியாது என ஓபிஎஸ் வாக்குமூலம் அளித்திருந்தார்.

மறுவிசாரணை:

இதனைத் தொடர்ந்து,அப்பல்லோ மருத்துவர்களிடம் மறுவிசாரனையை ஆறுமுகசாமி ஆணையம் நடத்தியது.அதன்பின்னர்,ஜெ.மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் இறுதி அறிக்கை தயார் செய்து அரசிடம் ஒப்படைக்க மேலும் ஒரு மாதம் அவகாசம் கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது.

தமிழக அரசு உத்தரவு:

இந்நிலையில்,முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையை முடித்துள்ள நிலையில்,இறுதி அறிக்கையை தயார் செய்ய மேலும் ஒரு மாதம் 9 நாட்கள் காலஅவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.கடந்த ஜூன் 24 ஆம் தேதியுடன் கால அவகாசம் முடிந்த நிலையில்,மேலும்,கால அவகாசம் வழங்கப்பட்டு ஆக.3 ஆம் தேதி இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Recent Posts

2036 ஒலிம்பிக்.. இந்தியாவில் நடத்த IOA விருப்பம்!

2036 ஒலிம்பிக்.. இந்தியாவில் நடத்த IOA விருப்பம்!

டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…

16 mins ago

“முகுந்த் வரதராஜன் பிராமணர்னு காட்ட துப்பில்ல”…ஆவேசமாக பேசிய மதுவந்தி!

சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…

34 mins ago

பெட்டிக்கடை தேன் மிட்டாய் இனி வீட்டிலே செய்யலாம்..!

சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…

1 hour ago

அமெரிக்க அதிபர் தேர்தல் : கமலா ஹாரிஸ் வெற்றி பெற பூர்விக கிராமத்தில் சிறப்புப் பூஜை!

திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…

4 hours ago

தமிழகத்தில் புதன்கிழமை (06/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…

4 hours ago

“2026 தேர்தலில் திமுக கூட்டணி தான்., ” திருமாவளவன் திட்டவட்டம்.!

திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…

4 hours ago