ஷீலா பாலகிருஷ்ணன், ராமமோகன ராவ் நேரில் ஆஜராக சம்மன்!ஜெயலலிதா மரணம் தொடர்பான விசராணை …

Published by
Venu

ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கைகள் விசாரணை ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், முன்னாள் தலைமைச் செயலாளர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையத்திடம் ஏற்கெனவே திமுகவைச் சேர்ந்த மருத்துவர் சரவணனும், ஜெயலலிதாவின் அண்ணன் மருமகன் மாதவனும் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட 10 மருத்துவ அறிக்கைகளுக்கும், இறந்த பின் அளித்த அறிக்கையும் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாக சுட்டிக்காட்டியிருந்தனர். எனவே, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் குறித்த அறிக்கையை வழங்குமாறு தமிழக சுகாதாரத்துறையிடம் ஆணையம் கோரியிருந்தது. அதன்படி, அப்பலோ மருத்துவமனை, மற்றும் எய்ம்ஸ் மருத்துமவனைகளின் மருத்துவ சிகிச்சை அறிக்கைகள் மற்றும் மரண அறிவிப்பு அறிக்கை
அடங்கிய தொகுப்பினை தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆணையத்திடம் சமர்ப்பித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அரசு ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோரும் அடுத்த வாரம் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும். எம்.எம்.சி. மருத்துவமனை டீனும் அரசு மருத்துவருமான முரளிதரன், வழக்கறிஞர் ஜோசப் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுளளதாகக் கூறப்படுகிறது. சசிகலா உள்பட 60 பேருக்கு ஆணையம் சம்மன் அனுப்பியிருப்பதாக தகவல் வெளியான நிலையில் வரும் 25-ம் தேதியுடன் விசாரணை ஆணையத்தின் காலக் கெடு முடிவடைகிறது. விசாரணைக்கு ஏற்கெனவே அழைக்கப்பட்டவர்கள் அளித்த விவரங்கள் போதுமானதாக இல்லை என்றும், மேலும் ஏராளமானோர் விசாரணைக்கு அழைக்கப்பட வேண்டி இருப்பதாலும், விசாரணை ஆணையத்துக்கான காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து தருமாறு ஆணையம் தரப்பில் அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விசாரணைக் காலம் நீட்டிக்கப்பட்டால் ஜெயலலிதாவுக்கு இதற்கு முன் சிகிச்சை அளித்த மருத்துவர்கள், பொறுப்பில் இருந்த அரசு அதிகாரிகள் உள்பட பலரும் விசாரிக்கப்பட வாய்ப்புள்ளது.

Recent Posts

ENGvsAUS : “போட்டியின் குறுக்கே வந்த கனமழை”! தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலிய அணி அசத்தல்!

ENGvsAUS : “போட்டியின் குறுக்கே வந்த கனமழை”! தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலிய அணி அசத்தல்!

பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…

5 hours ago

துணை முதல்வர் உதயநிதியின் முதல் நாள்.! பெரியார் திடல் முதல்., கலைஞர் இல்லம் வரை..,

சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…

11 hours ago

செந்தில் பாலாஜி எனும் நான்.., ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவி பிரமாணம்.!

சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…

12 hours ago

ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…

17 hours ago

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

1 day ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

1 day ago