முன்னால் முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினத்தை பெண்குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்தார் முதல்வர் எடப்பாடி… சிறப்பு பரிசாக பல அறிவிப்பும் வெளியீடு…
மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களுக்கு , மிகப்பெரிய கவுரவம் அளிக்கும் வகையில், அவரது பிறந்த நாளான, பிப்ரவரி 24ம் தேதியை, பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளுக்கான, சிறப்பு பரிசாக, ஆதரவற்ற குழந்தைகள், 21 வயதை அடையும்போது, 2 லட்சம் ரூபாய் வழங்குவது உள்ளிட்ட, சிறப்பான ஐந்து திட்டங்களை, முதல்வர் நேற்று அறிவித்தார். நேற்று சமூக நலத் துறை சார்பில், முக்கிய அறிவிப்புகளை, சட்டசபையில் நேற்று, 110 விதியின் கீழ், முதல்வர் வெளியிட்டார் அதில்,
- பெண் குழந்தைகளுக்காக, முன்னால் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஆற்றிய சேவையை நினைவுகூரும் வகையில், அவரது பிறந்த நாளான, வரும், 24ம் தேதி, மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக, தமிழக அரசால் கொண்டாடப்படும், மேலும், அரசு பாதுகாப்பு இல்லங்களில் வாழும், பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் இல்லாத குழந்தைகள், 21 வயதை நிறைவு செய்யும்போது, அவர்களது பெயரில், தலா, 2 லட்சம் ரூபாய் வங்கியில் செலுத்தப்படும் என்றும், இந்த நிதி அந்த குழந்தைகள், சமுதாயத்தில், தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள, இது உதவும் என்றார்.
- இரண்டாவதாக, பெற்றோர்கள், பாதுகாவலர் இல்லாத பெண் குழந்தைகள், தங்களுக்கு 18 வயது முடித்து, அரசு இல்லத்தில் இருந்து வெளியேறியபின், அவர்களது சமூக, பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்திட, சிறப்பு உதவி தொகுப்பு ஒன்றையும் அரசு வழங்கும் என்றும். இந்த உதவித் தொகுப்பில், உயர் கல்வி படித்தல், திறன் மேம்பாட்டு பயிற்சி, வேலைவாய்ப்பு, சுய தொழில் செய்தல் போன்றவை அடங்கும். அந்த பெண்கள், 50 வயது நிறைவடையும் வரை, இந்த உதவி வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
- மூன்றாவதாக, தமிழகத்தில் உள்ள பராமரிப்பு இல்லங்களில், ஆதரவற்ற மற்றும் முற்றிலும் கைவிடப்பட்ட குழந்தைகள், நல்ல குடும்ப சூழ்நிலையில் வளர்வதற்காகவும், தகுந்த குடும்பங்களை அடையாளம் கண்டு, அவர்கள் அந்த குழந்தைகளை சிறப்பான முறையில் வளர்ப்பதற்கும், அந்த குழந்தையை பராமரிப்பதற்கும்,தத்தெடுத்து வளர்க்கும் வளர்ப்பு பெற்றோருக்கு, மூன்று ஆண்டுகளுக்கு, மாதம், 2,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இனி இந்த தொகை 4,000 ரூபாயாக உயர்த்தப்பட்டு, ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்று அறிவித்தார்.
- மேலும், தற்போது, பெண் சிசுக் கொலைகள் குறைந்து வரும் நிலையில், சில மாவட்டங்களில் மட்டும், குழந்தைகள் பாலின விகிதம், சராசரி பாலின விகிதத்தை காட்டிலும் மிகவும் குறைவாக உள்ளது. எனவே, குழந்தைகள் பாலின விகிதத்தை அதிகரிப்பதற்கு, சிறப்பாக செயலாற்றும் முதல் 3 மாவட்டங்களுக்கு, தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களும், சான்றிதழும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படும் என்றும்.
- ஆதரவற்ற குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் உள்ள, முற்றிலும் ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகள், சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத் துறை அலுவலகங்களில் ஏற்படும், ‘சி’ மற்றும், ‘டி’ பிரிவு பணிஇடங்களில், வயது, கல்வி மற்றும் பிற தகுதிகளுக்கேற்ப, முன்னுரிமை அடிப்படையில் பணியமர்த்தப்படுவர் என்றும், மேலும், சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் உள்ள பணியிடங்களிலும், தகுதிக்கேற்ப, முன்னுரிமை அடிப்படையில் இவர்கள் பணியமர்த்தப்படுவர்கள் என்று தமிழக முதல்வர் அறிவித்தார்.