தமிழக வரலாற்றில் சுதந்திரம் அடைந்ததிலிருந்து ஆண்கள் மட்டுமே களம் கண்ட தமிழக அரசியலில் தனிப்பெரும் சக்தியாய்…. வாழ்க்கையின் இறுதி நிமிடம் வரை போராடி வாழ்ந்து மறைந்தவர் செல்வி.ஜெ. ஜெயலலிதா. இத்தகைய இரும்பு பெண்மணியாய் திகழ்ந்த இவரை அம்மா… என்ற லட்சக்கணக்கணக்கான தொண்டர்களின் அன்புக்குரிய அழைப்பால் அழைக்கப்பட்டவர்.
அதிமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் அதுவரை தமிழகத்தில் கோலோச்சி இருந்த திமுகவையும், அதன் தலைவர் கருணாநிதியையும்.. ஒன்றல்ல.. இரண்டல்ல.. 13 ஆண்டுகள் அரசியல் வனவாசம் அனுப்பியவர் எம்ஜிஆர். அதேபோல் ஜெயலலிதாவும் கருணாநிதிக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இத்தகைய ஆளுமையில் அவதாரமான முன்னால் தமிழக முதல்வர் செல்வி.ஜெ. ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினம் குறித்த சிறப்பு தொகுப்பு.
பிறப்பு:
ஜெ.ஜெயலலிதா பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி 1948 கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகாவில் உள்ள மேல்கோட்டை ஊரில் வாழ்ந்த ஜெயராம்-வேதவல்லி இணையரின் மகளாக பிறந்தார். இவரது பெற்றோர்கள் தந்தை ஜெயராம்-தாய் வேதவள்ளி ஆவர், ஜெயலலிதாவின் மூதாதையர்கள் தமிழ்நாட்டைப் பூர்விகமாகக் கொண்டவர்கள்.
ஜெயலலிதாவுக்கு இரண்டு வயது ஆன பொழுதே அவர் தந்தை ஜெயராம் காலமானார். ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமளவல்லி. ஜெயலலிதாவின் தாத்தா அவ்வூரில் உள்ள கோவில் ஒன்றில் அர்ச்சகராக இருந்தார். எனினும் அதன் பின்னர் திரைப்படத்தில் நடிக்க வந்த தாயார் வேதவல்லி தனது பெயரை சந்தியா என மாற்றிக்கொண்டார்.அவர் பெங்களூரில் இருந்தபோது ஜெயலலிதா பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.
திரைத்துறையில் ஜெயலலிதா:
அரசியல் அவதாரம்:
முதல்வராக அமர்ந்த கதை:
எம்ஜிஆர் மறைவின் பின் திருமதி. ஜானகி எம்.ஜி.ஆர் இடைக்கால முதல்வரானார். ஆனால் ஜானகி அரசை எதிர்த்து ‘ஜனநாயகப் படுகொலை’ என ஜெயலலிதா ஆளுநரிடம் மனு கொடுத்து போராட்டத்தில் ஈடுபட நிலவரம் கலவரமாகி ஜானகி அரசு கலைக்கப்பட்டது. அதன் காரணமாகவே ஜெயலலிதாவின் தேர்ந்த அரசியல் காய்நகர்த்தல்களின் முன் அவர் தோற்றுப் போனார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிளவுபட்டது.
‘ஜெ’ தலைமையில் ஓரணியும், ‘ஜா’ தலைமையில் ஓரணியுமாக இரு அணியினரும் கட்டிப் புரண்டு சண்டையிடாத குறையாக இருந்தனர். இம்முறை ஜா அணியை பின்னுக்குத்தள்ளி மக்களது ஏகோபித்த ஆதரவைப் பெற்றது ஜெ அணி. போடிநாயக்கனூர் தொகுதியில் வென்று எதிர்க்கட்சித் தலைவியாக முதன்முதலில் சட்ட சபைக்குள் நுழைந்தார் ஜெயலலிதா. தமிழக அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சித் தலைவராக ஒரு பெண் அமர்வது இதுவே முதல்முறை. அந்த வெற்றி மட்டுமல்ல, ஒரே மாதத்தில் தனக்கு எதிராக இருந்த ஜானகி அணியையும் சாம, பேத, தான, தண்ட முறைகளில் ஒன்றிணைத்து தனது தலைமையின் கீழ் ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்கினார் ஜெயலலிதா. பிரிவினையின் போது முடக்கப்பட்ட கட்சியின் இரட்டை இலைச் சின்னமும் திரும்பப் பெறப்பட்டது. பின் தனது தொடர்ச்சியான அயாரத உழைப்பாள் பல வெற்றிகளை பெற்று பலகோடி தொண்டர்களைக் கட்டி ஆண்டார். இவர் இதுவரை,
அவரது மரணச் செய்து கேட்டு அவர்கள் வெளிப்படுத்திய கட்டுக்கடங்காத அழுகையொலி உறுதிப்படுத்தியது. இவருக்கு, காய்ச்சல், நீர்ச்சத்துக் குறைபாடு என்ற காரணங்களுக்காக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின்பு 2016 டிசம்பர் 5-ஆம் தேதி அன்று இரவு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார் என்று அறிவிக்கப்பட்டது.
தன்னைச் சுற்றி எப்போதும் பகைமை இருந்தபோதிலும் தனி ஒரு நபராய் அவற்றைக் கண்டு அஞ்சாமல் தான் வாழ்ந்த காலம் முழுதும் துணிச்சலான சாதனைப் பெண்ணாக, நிகரற்ற அரசியல் தலைவியாக, பெண்களுக்கு முன் மாதிரியாக வாழ்ந்து மறைந்தவர் ஜெயலலிதா. இன்று ஜெயலலிதா மறைந்திருக்கலாம் ஆனால் அவர் என்றென்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்!
டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…