jayakumar [file image]
ஜெயக்குமார்: பாஜகவால்தான் நான் சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்தேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார். அப்போது செய்தியாளர் ஒருவர் 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் தான் தோல்வி அடைந்தோம் என பாஜகவினர் கூறுகிறார்கள் என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ஜெயக்குமார்” இவர்களுடன் கூட்டணி வைத்ததால் தான் எங்கள் ஆட்சியே போனது, இல்லையென்றால் நான் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இருப்பேன். ராயபுரத்தில் நான் தோற்கிற ஆளா..? நான் மனம் திறந்து சொல்கிறேன். இதுவரை சொன்னது இல்லை 25 வருடம் முடிசூடா மன்னனாக ராயபுரத்தில் இருந்தேன்.
தோல்வி என்பதையே அறியாதவன் நான், பாஜகவால்தான் நான் தோல்வியடைந்தேன். பாஜக இல்லை என்றால் நான் சட்டமன்றத்திற்கு சென்றிருப்பேன் என்று தெரிவித்தார். ராயபுரத்தில் 40 ஆயிரம் கிறிஸ்துவர், இஸ்லாமியர்கள் உள்ளனர். என் மீது மக்களுக்கு கோபமும் கிடையாது. அப்பவே என்கிட்ட சொன்னாங்க பாஜகவை விட்டுவிடுங்கள் என்று சொன்னார்கள்.
நான் சொன்னேன் வேஸ்ட் லக்கேஜ் தான், வேறு என்ன செய்வது, சமயம் வரும் போது கழட்டி விட்டுவிடுவோம் என கூறினேன். அதே போல் நேரம் வந்தது கழட்டி விட்டுவிட்டோம். பாஜக இல்லை என்றால் நான் 40 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருப்பேன் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் தமிழகம் முழுவதும் கடந்த 2019 மற்றும் 2021 ஆகிய தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைவதற்கு பாஜக தான் காரணம்” என கூறினார்.
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இவ்விரு…
பாங்காக் : மியான்மர் நாட்டில் இன்று மதியம் வேளையில், 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 6.4 ரிக்டர்…
சென்னை : சேப்பாக்கத்தில் ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணியும், ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணியும் மல்லுக்கட்டி வருகின்றது. இரு…
சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான 8-வது போட்டி…
சென்னை : ஐபிஎல் 2025-ன் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றனர்.…
பாங்காக் : மியான்மரில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அந்நாடு கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட…