முடிசூடா மன்னனாக இருந்தேன்.. பாஜகவால் தான் போச்சு..ஜெயக்குமார் குமுறல்..!

jayakumar

ஜெயக்குமார்:  பாஜகவால்தான் நான் சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்தேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார். அப்போது செய்தியாளர் ஒருவர் 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் தான் தோல்வி அடைந்தோம் என பாஜகவினர் கூறுகிறார்கள் என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ஜெயக்குமார்” இவர்களுடன் கூட்டணி வைத்ததால் தான் எங்கள் ஆட்சியே போனது, இல்லையென்றால் நான் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இருப்பேன். ராயபுரத்தில் நான் தோற்கிற ஆளா..? நான் மனம் திறந்து சொல்கிறேன். இதுவரை சொன்னது இல்லை 25 வருடம் முடிசூடா மன்னனாக ராயபுரத்தில் இருந்தேன்.

தோல்வி என்பதையே அறியாதவன் நான், பாஜகவால்தான் நான் தோல்வியடைந்தேன். பாஜக இல்லை என்றால்  நான் சட்டமன்றத்திற்கு சென்றிருப்பேன் என்று தெரிவித்தார். ராயபுரத்தில் 40 ஆயிரம் கிறிஸ்துவர், இஸ்லாமியர்கள் உள்ளனர்.  என் மீது மக்களுக்கு கோபமும் கிடையாது. அப்பவே என்கிட்ட சொன்னாங்க பாஜகவை விட்டுவிடுங்கள் என்று சொன்னார்கள்.

நான் சொன்னேன் வேஸ்ட் லக்கேஜ் தான், வேறு என்ன செய்வது,  சமயம் வரும் போது கழட்டி விட்டுவிடுவோம் என கூறினேன். அதே போல் நேரம் வந்தது  கழட்டி விட்டுவிட்டோம். பாஜக இல்லை என்றால் நான் 40 ஆயிரம்  ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருப்பேன் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் தமிழகம் முழுவதும் கடந்த 2019 மற்றும் 2021 ஆகிய தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைவதற்கு பாஜக தான் காரணம்” என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Tamilnadu Live
Pooran
TATAIPL - DCvLSG
KL Rahul
Vijay - Ashwath Marimuthu
DC vs LSG
janaNayagan - Vijay