நகைக்கடன் தள்ளுபடி பல்வேறு முறைகேடு -முதல்வர்..!
5 சவரன் நகை கடன் தள்ளுபடி என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது நூற்றுக்கு நூறு உண்மை என முதல்வர் தெரிவித்தார்.
தமிழக அரசு பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, 5 சவரனுக்கு கீழ் வைத்த நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற திமுக வாக்குறுதி என்ன ஆனது..? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், 5 சவரனுக்கு உட்பட்டுள்ள தகுதியானவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என ஆதாரத்துடன் கொடுத்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். 5 சவரன் நகை கடன் தள்ளுபடியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன.
5 சவரன் நகை கடன் தள்ளுபடி என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது நூற்றுக்கு நூறு உண்மை. திமுக ஆட்சிக்கு வந்துவிடும் என கருதி மக்கள் நகைகடன்களை பெற்றனர். நகைக் கடன் தள்ளுபடியில் முறைகேடுகள் நடந்ததை எதிர்க்கட்சித் தலைவர் ஆதரிக்கிறாரா..? தகுதி உடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என பதிலளித்தார்.