கூட்டுறவு சங்கங்களில் பெற்ற 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. இதைதொடர்ந்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகையை அடகுவைத்து பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், சென்னையில் 5 சவரன் நகைக்கடன் பெற்ற 165 பேருக்கு நகையை திருப்பி வழங்கிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, வரும் 31ம் தேதிக்குள் தமிழ்நாட்டிலுள்ள 14.40 லட்சம் பேருக்கு ரூ.6,000 கோடி மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பது உறுதி என தெரிவித்தார்.
நகை கடன் தள்ளுபடி தகுதியுள்ள நபர்கள் உரிய ஆவணங்கள் அளித்தால் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும். போலி நகை கடன் தள்ளுபடி கொடுக்க முடியாது என்று அமைச்சர் பெரியசாமி திட்டவட்டமாக தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் நகை கடன் வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…