நகை கடன் தள்ளுபடி – தமிழக அரசு அதிரடி உத்தரவு..!
நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியுடையவர்கள் யார் என்பது தொடர்பான பட்டியலை தயாரிக்க துணை பதிவாளர் தலைமையில் குழு அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு கீழ் நகை கடன் உள்ளவர்களில் தகுதி உடையவர்களின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அரசு அறிவித்திருந்தது. மேலும், அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இது தொடர்பான ஆய்வின் போது, போலி நகைகளை வைத்து, நகை கடன் பெற்றவர்கள் தொடர்பான விவரங்கள் கிடைத்துள்ளது. இதனையடுத்து, நகை கடன் தள்ளுபடிக்கு தகுதி உடையவர்கள் யார்? போலி நகைக்கடன் பெற்றவர்கள் யார்? என்பது தொடர்பான பட்டியலை தயாரிக்குமாறு கூட்டுறவு சங்கங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் தான், நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியுடையவர்கள் யார் என்பது தொடர்பான பட்டியலை தயாரிக்க துணை பதிவாளர் தலைமையில் குழு அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த குழு தயாரிக்கும் பட்டியலின் அடிப்படையில் தான், அந்தந்த கூட்டுறவு சங்கங்களில் யார் யாருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பது தொடர்பான அனைத்து விவரங்களும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.