நகைக்கடன் தள்ளுபடி.. வங்கிகளுக்கு ரூ.1,000 கோடி விடுவிப்பு!
கூட்டுறவு வங்கிகளில் அடமானத்தில் உள்ள நகைக்கடன் தள்ளுபடி திட்டத்திற்கு மேலும் ரூபாய் ஆயிரம் கோடி விடுவிப்பு.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் பெற்றவர்கள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தலில் வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி, பல ஆய்வுகளுக்கு பின் தகுதியான அனைத்து நபர்களுக்கு நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் நகைக்கடன் தள்ளுபடி திட்டத்திற்காக கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ.1,000 கோடியை விடுவித்தது தமிழக அரசு. நடப்பு நிதியாண்டில் ஏற்கனவே ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், மேலும் ரூ.1,000 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.